பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது முருகனின் அறுபடை வீடுகளில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலும் ஒன்று. பழனி மலைக் கோயிலில் குடமுழுக்கு திருவிழா வரும் ஜனவரி 27-ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில்
பங்கேற்பதற்கு முன்பதிவு செய்யும் முறையை அறிவித்தது கோவில் நிர்வாகம். அதாவது, குடமுழுவுக்கு விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், திருக்கோயில்
இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் வலைதலமான www.hrce.tn.gov.in ஆகியவற்றின் மூலம் 18.01.2023 முதல் 20.01.2023 முடிய கட்டணமில்லா முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.