பொங்கல் பண்டிகை தமிழகத்தில் தமிழர் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் பொங்குதல்’ என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும். அதுபோல, தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த வருடம் தைப்பொங்கல் 15.1.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வரவிருக்கின்றது. சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இந்த தைத்திருநாளை நாம் கொண்டாடுகின்றோம். சூரியன் இல்லை என்றால் இந்த பூலோகத்தில் ஒரு சின்ன உயிர் கூட வாழ முடியாது. நமக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுத்து, வாழ்வாதாரத்தை கொடுக்கக்கூடிய அந்த சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்த வருட தைப்பொங்கல் வந்திருப்பதால் இது சிறப்பு வாய்ந்த பொங்கலாக கருதப்படுகிறது. பொங்கல் வைக்க உகந்த நேரம்
நல்ல நேரம் – காலை 07.30 மணி முதல் 08.30 வரை
மாலை 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் – காலை 10.30 முதல் 11.30 வரை
எமகண்டம் – பகல் 12 முதல் 01.30 வரை
ராகு காலம் – மாலை 04.30 முதல் 6 வரை
பொங்கல் வைக்க சரியான நேரம் – காலை 07.45 முதல் 08.45 வரை மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் அதாவது ஜனவரி 16
2023
காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை