சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவகம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் “இளைஞர் திருவிழா” 2023-24 ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றிய விரிவான அறிவை மேம்படுத்திடவும், இளம்பருவ ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திட பள்ளி மாணவர்களுக்கு வினாடிவினா போட்டியும் கல்லூரி மாணவர்களுக்கு குறும்படம், நாடகம், மாரத்தான் போட்டிகளை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு “மாரத்தான் -Red Run (5 km – வயது 17-25)” 30.08.2023-ம் தேதியன்று காலை 07.00 மணியளவில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் முதல் தென்னகப்பண்பாட்டு மையம் வரை நடைபெறுகிறது. மாரத்தானில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பட்டியலை கல்லூரியின் சார்பாக dapcuthanjavur2023@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி 9659654996 மூலம் முன்பதிவு செய்துகொள்ளவும். மாரத்தானில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் வெற்றிப்பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/-ம், இரண்டாம் பரிசு ரூ.7000/-ம், மூன்றாம் பரிசு – ரூ.5000/-ம் என ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என தனிதனியாகவும் மற்றும் ஆறுதல் பரிசாக 7நபர்களுக்கு தலா 1000₹வழங்கப்படும் மேலும் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். தஞ்சாவூர் மாவட்ட கல்லூரி மாணவ/மாணவிகள் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
- August 26, 2023
You can share this post!
editor