தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தபட்டுவரும் 1. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2. உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் 3. வங்கி கடன் மானிய வழங்கும் திட்டம் 4. அனைத்து வகை திருமண நிதியுதவி தொகை வழங்கும் திட்டம் 5. அனைத்து வகை மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகிய 5 திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் ஜீலை 2023 முதல் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது http://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் கைப்பேசிஎண், வங்கி கணக்கு புத்தக நகல், மற்றும் இணைய சேவையில் தேவைப்படும் இதர ஆவணங்களுடன் மேற்கண்ட ஐந்து திட்டங்களுக்கும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தீபக் ஜேக்கப் இஆப அவர்கள் தெரிவித்தார,