தஞ்சையில் 11-ந் தேதி மின்நிறுத்தம்
தஞ்சை கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள துணை மின்நிலையத்தில் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான மேம்பாலம், சிவாஜிநகர், சீதா நகர் சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜ் ரோடு ஆப்ரகாம்பண்டிதர்நகர், திருநகர், ஆண் டாள்நகர், எஸ்.பி. குளம் விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர் வெங்க டசலாபதி நகர், பி.ஆர்.நகர் ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன் நகர் கூட்டுறவு காலனி, களிமேடு-3, களிமேடு-4, மேலவீதி, தெற்கு வீதி பெரிய கோவில், செக்கடிரோடு, மேல அலங்கம் ரெயிலடி, சாந்தபிள்ளைகேட் மகர்நோன்புச்சாவடி, வண்டிக்கார தெரு தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோவில், சேவியர் நகர், சோழன் நகர் பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்என்எம் ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுபேட்டை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு ராவுத்தர்பாளையம் ஆகிய பகுதிகளில் 11-ந் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.