Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சையில் இலக்கிய திருவிழா பரிசு 5000₹, 3000₹,2000₹

தஞ்சையில் இலக்கிய திருவிழா பரிசு 5000₹, 3000₹,2000₹
Top Banner

மாவட்ட ஆட்சியர்
பத்திரிக்கை செய்தி

தமிழக அரசு பொது நூலகத்துறை சார்பில் தமிழ்நாட்டின் சென்னை. கோவை, மதுரை, நெல்லை, தஞ்சாவூர் ஆகிய ஐந்து இடங்களில் இலக்கியத் திருவிழா நடத்துகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவிரி இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு எதிர்வரும் 15.03.2023 புதன்கிழமை காலை 10:30 மணி முதல் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கூட்டரங்கில் அனைத்து கல்லூரி மாணவர் மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கவிதைப் போட்டி “காவிரியைப் போற்றுவோம்’ ‘காவிரியை போற்றும் வகையில் தலைப்பு அமைய வேண்டும், பேச்சுப் போட்டி”தமிழ் இலக்கியங்களில் தமிழர் மரபு தலைப்பிலும் கட்டுரைப் போட்டி”தமிழர் பண்பாடே சமுத்துவப் பண்பாடு” “தரணி போற்றும் தமிழர் பண்பாடு” தலைப்பிலும் பாட்டுப் போட்டிய மண்ணின் மணம் கமழும் மக்கள் பாடல்கள்” “சோழ மண்டல நாட்டுப்புறப் பாடல்கள்” தலைப்பிலும் நடைபெறும். ஒரு போட்டிக்கு ஒரு கல்லூரியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே பங்கு பெறலாம். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் தங்களது. பெயரினை 13.03.2023 ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சலில் Email id: sathiyamoorthy6932@gmail.com அனுப்பு வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று காலை 10.00 மணிக்குள் கல்லூரிக் கலையாரங்கத்தில் மாணவர்கள் வருகை தர வேண்டும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பொது நூலகத்துறை சார்பில் முதல் பரிசு மு.5000, இரண்டாவது பரிசு ரூ.3000, முன்றாவது பரிசு கு.2000 மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். இப்போட்டி குறித்த விபரங்களை 9751806932 என்ற எண்ணைய நொடர்பு கொண்டு அறியலாம். மேற்கண்ட போட்டிகளில் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *