பங்குனி மாதத்தில் பெளர்ணமியும், உத்திர நட்சத்திரமும் இணையும் நாளை பங்குனி உத்திர திருநாள் என்கிறோம். இந்த நாள் முருகப் பெருமானுக்குரிய முக்கிய விரத நாட்களில் ஒன்றாக சொல்லப்பட்டாலும், இந்த நாள் தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள். அதனால் தான் பங்குனி உத்திர விரதத்திற்கு கல்யாண விரதம், மங்கல விரதம், கல்யாண சுந்தர விரதம் போன்ற பெயர்களில் குறிப்பிடுகிறோம்.
இந்நாளில் பழனி முருகப்பெருமானை வழிப்பட தெற்கு இரயில்வே தஞ்சையில் இருந்து சிறப்பு இரயில் சேவை இரு தினங்களுக்கு வழங்குகிறது
பழனி வரை இயங்க உள்ள பங்குனி உத்திரம் சிறப்பு ரெயிலின் கால அட்டவணை.
நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டும் இயக்கம்.