Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி
Top Banner

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண்/பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

கபாடி, கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல், சிலம்பம்,கையுந்து பந்து ,கிரிக்கெட், கால்பந்து மற்றும் டென்னிஸ் ,மேசைப்பந்து ,சிலம்பம்,தடகளம் விளையாட்டுகள் மண்டல அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பிற விளையாட்டுகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.

பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் சார்பாக மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

தனி நபர் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

மாவட்ட அளவிலான போட்டிகள்: தனிநபர், ஒற்றையர், இரட்டையர் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும், குழுப் போட்டிகள் ஒவ்வொருவருக்கும் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும் அளிக்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தஞ்சை மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கை செய்தி Notification இணைக்கப்பட்டுள்ளது

Top Banner

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • Meiyazhagan - Kotravai Silambam Academy , January 27, 2023 @ 12:43 pm

    This is the first time Silambam is added as a game in CM Trophy and it’s a very happy news for all the Silambam players all over Tamilnadu. But the sad thing is Silambam players around New bus stand are not allowed to practice in Serfoji College ground. Please make this news reach till the concern higher official to let us practice in Serfoji College ground.
    We are all daily abused by the college management to use the ground. We consists of 15 State players who are all going to represent Thanjavur in State level competition and also It’s about 120 players interested towards sports and it may destroy the kid’s and parent’s interest towards sports. Kindly do the needful. We expect support from NammaThanjavur team also.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *