Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

பயிற்சியிடன் தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

பயிற்சியிடன் தொழில் தொடங்க மானியத்துடன் கடன்
Top Banner

படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம்” (NEEDS) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் +2, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமோ). ஐ.டி.ஐ./ அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சியை கல்வித்தகுதியாக பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு மூன்று வார காலம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து பின்னர், வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 51 எண்கள் (மானியம் ரூ.503.00 இலட்சம்) என இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், திட்ட மதிப்பீடு ரூ.10.00 இலட்சத்திற்கு மேல், அதிகபட்சமாக ரூ.500.00 இலட்சம் வரையிலான உற்பத்தி மற்றும் சேவைத்தொழில் துவங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதமும். சிறப்பு பிரிவினர் 5 சதவிகிதமும் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வயதுவரம்பு பொது பிரிவினருக்கு 21க்கு மேல் 35க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு (மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர். சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) அதிகபட்ச வயது 45 ஆகும். பயனாளிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு எதுமில்லை.

இத்திட்டத்தின்கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பிட்டில் 25 % (அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை) முதலீட்டு மானியம் 3 % வட்டி மானியமும் அளிக்கப்படும், சிறப்பு பிரிவினரான மகளிருக்கு இத்திட்டத்தின் கீழ் 50 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான தேர்வு குழுவினால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். SC ST மற்றும் மாற்றுத்திறனாளிளுக்கு 10 % மானியம் திட்டமதிப்பீல் வழங்கப்படும். ஆர்வமுள்ள படித்த தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/needs ஆகும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும். (தொலைபேசி எண்.257345/255318) ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இஆப., அவர்கள் தெரிவித்தார

செய்திவெளியீடு : செய்தி -மக்கள் தொடர்பு அலுவலர்,தஞ்சாவூர்

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *