Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

2023 ஆம் ஆண்டு திருநங்கையர் விருது பரிசு 1லட்சம்

2023 ஆம் ஆண்டு திருநங்கையர் விருது பரிசு 1லட்சம்
Top Banner

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட சமூக நல அலுவலகம் 2022-2023 ஆண்டிற்கு திருநங்கையருக்கு முன்மாதிரி விருது வழங்க சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேரி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் மற்ற திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், திருநங்கையர் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15 அன்று ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருதானது ரூ.1,00,000/- காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவதற்கு விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் awards.tn.gov.in பதிவு செய்வதற்கான விதிமுறைகள்.http://awards.tn.gov.in

திருநங்கையர் தின விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்களை

அனுப்புவதற்கான விதிமுறைகள்:

  1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில்
    முன்னேறி இருத்தல் வேண்டும்.
  2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.
  3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

கையெட்டில் (Booklet) இணைக்கப்பட வேண்டியவை பொருளடக்கம் மற்றும் பக்க எண்.

உயிர் தரவு (Bio Data) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரைக் கடிதம். மாவட்ட சமூக நல அலுவலரின் பரிந்துரைக் கடிதம்.

சுயசரிதை. தனியரைப் பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்) Soft & Hard copy. விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம். விருதின்

பெயர் / யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்)

சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்) • சேவையைப் பாராட்டி பத்திரிக்கை செய்தித் தொகுப்பு,

• சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை.

• சமூக சேவையாளரின் சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக

பயனாளிகள் பயனடைந்த விவரம்.

  • சமூகப்பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள

காவல்நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் இல்லை என்பதற்கான சான்று. ஏதும்

இணைப்பு படிவம் தமிழில் (மருதம் எழுத்துருவில்) முழுமையாக பூர்த்தி

செய்து Soft Copy & Hard Copy அனுப்பப்பட வேண்டும்.

கையேடு (Booklet) தமிழில் அச்சு (Print) செய்யப்பட்டு தலா நகல்கள் அனுப்பப்பட வேண்டும். 2 மேலும் இதற்கான படிவங்கள் மற்றும் விபரங்களுக்கு அறை எண்.303, 3வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூ என்ற முசுவரியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் 27,02.2023 க்குள் விண்ணப்பங்கள் பெறப்படும் மேற்கண்ட தகவல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்

செய்திவெளியீடு : செய்தி -மக்கள் தொடர்பு அலுவலர்,தஞ்சாவூர்

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *