Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

இலவச தையல் இயந்திரம் உடனே Apply செய்வீர் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இலவச தையல் இயந்திரம் உடனே Apply செய்வீர் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Top Banner

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அம்மையார். நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மாற்றுத் திறனாளி மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்: 1. வருமானச் சான்று நகல் ரூ.72,000/-த்திற்குள் இருத்தல் வேண்டும் (தாசில்தாரிடமிருந்து பெறப்பட வேண்டும்). 2. பிறந்த தேதிக்கான வயது சான்று நகல் அல்லது கல்வி சான்று நகல் வேண்டும் (வயது 20 முதல் 40 வரை இருத்தல் வேண்டும்) 3. விதவையாயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெறப்பட வேண்டும். 4. சாதிச் சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும். 5. கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று நகல் (தாசில்தாரிடமிருந்து) பெற வேண்டும். 6. மாற்றுத் திறனாளியாயின் அதற்கான சான்று நகல் இணைக்கப்பட வேண்டும். 7. தையல் தெரியும் என்பதற்கான சான்று நகல் (இணைக்கப்பட்ட வேண்டும்). 8. குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் 9. பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் 2 .மேற்கண்ட ஆவணங்களுடன் அவரவர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர்/ ஊர்நல அலுவலர் ஆகியோர்களை அணுகி, இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அறை எண்.303, 3வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் திரு-தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்,

செய்திவெளியீடு : செய்தி -மக்கள் தொடர்பு அலுவலர்,தஞ்சாவூர்

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *