மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (20-01-2023)அன்று புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரி கட்டிடங்களை ₹202.07 கோடி மதிப்புள்ள வகுப்பறை உள்ளிட்ட கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக சென்னையில் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மன்னர் சரபோஜி மற்றும் குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரியில் நடைபெற்ற காணொளி நிகழ்வில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். எஸ். பழனிமாணிக்கம்,சட்ட மன்ற உறுப்பினர் திரு .டி.கே.ஜி.நீலமேகம் மேயர் திரு.சன் ராமநாதன் ,துணை மேயர் திருமதி.அஞ்சுகம்பூபதி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பார்வையிட்டனர் மேலும் மண்டல நிர்வாக இயக்குனர் கல்லூரி ஆசிரியர்கள் பேராசியர்கள் கலந்துகொண்டனர்