உள்நாட்டு மீன் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும் மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் செயல்படுத்தப்படவுள்ளது; விதமாக அரசினால் கீழ்காணும் திட்டம்
இதன்படி, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் இடுபொருள் 2021-22 கீழ் விரால் மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்திட மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளால் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளை மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி வீரால் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் ஏற்கனவே 1000 சதுர மீட்டர் பரப்பளவில் புணரமைத்திடவும் மற்றும் விரால் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செவினம் ஆக மொத்தம் ரூ.75000/-ஸ் 40% மானியமாக ரூ.30000/- வழங்கப்படும்.
மேற்கண்ட திட்டத்திற்கு மானிய தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மேற்படி திட்டத்தின் கீழ விண்ணபிக்க விரும்பும் பயனாளிகள் எண்.873/4 அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரில் இயங்கும் தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணபங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 25.01.2023 விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆய தெரிவிக்கிறார்.
செய்திவெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,தஞ்சாவூர்