மத்திய அரசு பணி தேர்வை தமிழில் எழுத அனுமதி
எஸ்எஸ்சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதில் திருத்தங்கள் இருந்தால் அடுத்த மாதம் 23 மற்றும் 24-ந்தேதிகளில் மேற் கொள்ளலாம்.விண்ணப்பித்தவர்களுக்கான வழித் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையா ளம் உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும். இதற்கு முன்பு வரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டு வந்ததாகவும், இந்தமுறை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in