Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சையின் புதிய சுற்றுலாத்தளமாக மாறியுள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தஞ்சையின் புதிய சுற்றுலாத்தளமாக மாறியுள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Top Banner

தஞ்சாவூர் மாநகராட்சி பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியகத்தினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் ஆகியோர் (14.01.2023) அன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செ.இராமலிங்கம் அவர்கள், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திரு.மு.சண்முகம் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.துரை.சந்திரசேகரன் அவர்கள் (திருவையாறு), திரு.டி.கே.ஜி.நீலமேகம் அவர்கள் (தஞ்சாவூர்), மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.உஷாபுண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் உடன் உள்ளனர்.

தஞ்சாவூர் கோர்ட் ரோட்டில் அமைந்திருந்த பழைய கலெக்டர் அலுவலகத்தில்
14-01-2023 அன்று தஞ்சை மக்களுக்கு பொங்கல் பரிசாக பொதுமக்கள் பார்வைக்கு தஞ்சாவூர் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது
ஆகவே தஞ்சை பொதுமக்கள் அனைவரும் இந்த தஞ்சாவூர் அருங்காட்சியகத்திற்குநேரில் பார்வையிட்டு
வரலாற்றுச் செய்திகள் மற்றும் வியக்கத்தக்க பல செய்திகள் ,சுவடுகள்,
நீர் செல்லும் வழிகள்,

புவிசார் குறியீடு பொருட்கள், விலைமதிப்பில்லாத பழங்கால வரலாற்றுச் சிலைகள், வியக்கத்தக்க 7d தியேட்டர் வசதி,பறவைகள் பூங்காவில் பொதுமக்கள் ,குழந்தைகள் தங்களுக்குபிடித்த பறவைகளை தங்கள் கைகளில் ஏந்தி மகிழ்ச்சியாக கொண்டாடும் தருணம்.
தஞ்சாவூர் அருங்காட்சியத்திற்கு தற்போது இரண்டு மணி நேரம் இன்பச் சுற்றுலா செல்வதற்கு உகந்ததருணம் .
இந்த அருங்காட்சியகத்தின் நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30(ஐந்து முப்பது மணி)வரை செயல்படும்.தஞ்சாவூர் அருங்காட்சியகத்திற்கு நுழைவு கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பாக வசூலிக்கப்படுகிறது.தஞ்சை பொதுமக்கள் விடுமுறை நாட்களில் கண்டு களித்து ,வெளிநாடுகளில் உள்ள, வெளி மாநிலங்களில் உள்ள ,வெளி ஊர்களில் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி நம் அழகிய தஞ்சையின் பெருமையை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்


Top Banner
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *