Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கடற்பசு தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி பரிசு 5000₹ ,3000₹,2000₹

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கடற்பசு தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி பரிசு  5000₹ ,3000₹,2000₹
Top Banner

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கடற்பசு தின விழிப்புணர்வு ஓவியப் போட்டி தமிழ்நாடு அரசு. வனத்துறை தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் உலகில் அழிந்துவரும் அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசுவினைக் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும், இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் கடற்பகுதிகளில் இவ்வுயிரினம் கண்டறியப்பட்டு முதல் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டதையும், உலக கடற்பசு தினமான மே 28ஆம் நாளினை கொண்டாடும் முகமாகவும், மாவட்ட அளவிலான ஓவியப்போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான போட்டியானது வரும் 22.05.2023 திங்கள் கிழமை

அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. பள்ளிகளில் பயிலும் 8, 9, 10 வகுப்பு மாணவர்கள் முதல் பிரிவாகவும், 11, 12

வகுப்பு மாணவர்கள் இரண்டாம் பிரிவாகவும், கல்லூரி அளவில் இளநிலை மற்றும்

முதுநிலை மாணவர்கள் மூன்றாம் பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு பிரிவிற்கும் தலா மூன்று பரிசுகள் என முதல் பரிசு ரூ.5000/-,

இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என்று ஒவ்வொரு பிரிவிற்கும் தலா ரூ.10.000/- விதம் மூன்று பிரிவிற்கும் சேர்த்து கூடுதல் பரிசுத்தொகையாக ரூ.30,000/- வழங்கப்படவுள்ளது.

போட்டியில் பங்குபெறும் மாணவர்களுக்கு வரைவதற்குரிய அட்டைகள் (chart) துறை மூலம் வழங்கப்படும். இதர வரைவு உபகரணங்கள் பென்சில்,

வண்ணக்கலவைகள் போன்றவற்றை போட்டியாளர்களே கொண்டுவரவேண்டும்.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு. பரிசளிப்பு விழா, இடம் முதலிய

விவரங்கள் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் திரு.அகில் தம்பி. இ.வ. அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் விவரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் 9655697390, 9688302337.

7502709591 ஆகிய அலைபேசிகளில் தொடர்பு கொள்ளலாம். அரிய கடல்வாழ் உயிரினமான கடற்பசு தொடர்பான ஓவியங்களைத் தீட்டி பரிசுகளை வெல்லவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு ஒளிரவும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்திவெளியீடு : செய்தி -மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *