Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் வேலை வாய்ப்பு சம்பளம் 15,700- 50,000

கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் வேலை வாய்ப்பு சம்பளம் 15,700- 50,000
Top Banner

கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் (OFFICE ASSISTANT) பணியிடம் நிரப்பும் பொருட்டு கீழ்க்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் எழுதி கடவுச்சீட்டு அளவில் புகைப்படம் ஒட்டி உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுயகையொப்பமிட்டு (Self Attested) இணைத்து முதல்வர்(பொ), அரசு கவின்கலைக்கல்லூரி, மேலக்கொட்டையூர், சுவாமிமலை மெயின்ரோடு, மேலக்காவேரி போஸ்ட், கும்பகோணம், தஞ்சாவூர்-612002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் 15.03.2023 (மாலை 5.45) அனுப்பிவைக்கப்பட வேண்டும்). குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும், ஏற்கப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்ப படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட இணையதளம் https://thanjavur.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பின்றி இரத்து செய்யவோ, கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி முதல்வர்(பொ) அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *