Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சையின் நீளமான பாலமாக மாறுகிறது சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் 1.5km +

தஞ்சையின் நீளமான பாலமாக மாறுகிறது சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் 1.5km +
Top Banner

தஞ்சை மக்களின் பல நாள் கோரிக்கை ஒன்றி நிறைவேறவுள்ளது சாந்தபிள்ளை கேட் மேம்பாலம் மக்களால் மரணபாலம் என்று அழைக்கப்படும் பாலம் நாகை ,திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டையில் இருந்து வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்ல இவ்வழியே எளிதான வழி சில ஆண்டுகளுக்கு முன் சாந்தம்பிள்ளை மேம்பாலம்வண்டிக்கார தெரு முதல் (மேரீஸ் கார்னர்) வரை கட்டப்பட்டது ஆனால் பாலம் முடியும் இடம் நாஞ்சி கோட்டை சாலை ஆரம்பிக்கிறது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ,அதிக விபத்துகளும் ஏற்ப்பட்டு வந்தது அருகில் இருக்கும்இருநபள்ளியில் பயலும் மாணவ மாணவிகளுக்கு ஆபத்தாகும் அமைந்தது (இந்த மேம்பாலம் அருகில் அதிக பள்ளிகளும்) மருத்துவமனைகளும் அமைந்துள்ளது இதனால் ரோட்டை கடக்கவே மக்கள் மிக சிரமப்படுகின்றனர்

ஜனவரி 31 அன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாலத்தை ஆய்வு செய்தார் இராமநாதன் இரவுண்டான வரை பாலத்தை நீடிக்க ஆய்வு மேற்கொண்டார்

இந்த பாலத்தினை நீட்டிப்பது தொடர்பாக நெடுஞ்சா லைத்துறையினர் ஆய்வு செய்து, திட்டமதிப்பீடு தயார் செய்யப்படும்.முதமைச்சர், சம்பந்தப்பட்ட அமைச்ச ரின் கவனத்திற்கு எடுத்து சென்று உடனடியாக உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு தஞ்சை மக்களுக்கு வரப்பிர சாதமாக இருக்கும்
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாவட்ட 5 கலெக்டர் தினேஷ் பொன் ராஜ்ஆலிவர்.டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி கவுன்சிலர் நீலகண் டன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *