07.01.2023 முதல் 15.01.2023 வரை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 13வது (UNDER 14) தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக நான்கு பெண்களில் ஒருவராக தஞ்சாவூர் முனிசிபல் காலணியில் வசித்து வரும் குமார், இந்து இவர்களின் மகள் விபிசா என்பவர் கலந்து கொண்டார். இவர் முனிசிபல் காலணியில் இயங்கி வரும் நீலகிரி ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். காம்போண்ட் போவ் பிரிவில் தமிழ்நாடு பெண்கள் அணி தகுதிப் பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற எளிமினேசன் சுற்றில் மணிப்பூர், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களை வென்று இறுதிச் சுற்றில் ஆந்திர மாநிலத்துடன் போட்டியிட்டு (TN-212 / AP-211) என்ற புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். விபிசா கடந்த ஒருவருட காலமாக தேசிய வில்வித்தைப் பயிற்சியாளர் விஜய் அவர்களிடம் பயிற்சிப் பெற்று வருகிறார். மாணவிக்குத் தேவையான அணைத்து உதவிகளையும் அவர் செய்து வருகிறார்.
You can share this post!
administrator
1 Comment