இன்று டெல்லியில் காலை நடைப்பெற்ற குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது கடந்தஆண்டு தமிழக அரசு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று தமிழக அரசின் அலங்கார ஊர்தி, பெண்களை மையப்படுத்தியதாக இருந்தது. ஊர்தியின் முகப்பில் அவ்வையாரின் உரு வம் பிரமாண்டமாக காட்சி அளித்தது. அது ஒரு மண்டபத் தின் மேலே இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் நாலா புறங்களி லும் சிற்பங்கள் இடம்பெற்று இருந்தன. அதில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிற்பமும் இருந்தது.
இந்த கட்டமைப்பின் பின் னால் தமிழகத்தின் புகழ்பெற்ற பெண்கள் சிலைகளாக உருவாக் கப்பட்டு இருந்தனர். தஞ்சை பாலசரஸ்வதி பரதம் ஆடுவது போலவும், எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைக்கருவியுடனும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மை யார் மருத்துவப்பையுடனும் சிலைகளாகி இருந்தனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சிலையும் இடம்பெற்று இருந்தன. வாழும் இயற்கை விவசாயி
பாப்பம்மாள் கையில் மண்வெட்டியுடன் நிற்கும் சிலையும் இந்த ஊர்தியில் இடம்பெற்றுள்ளது. இந்த கட்டமைப்புக்கு பின்னால் தஞ்சை கோபுரம் இருந்தது. ஊர்தியின் இருபுறத்திலும் மேளவாத்தியங்களுடன் கரகம் கலைஞர்கள் நடனமாடி சென்றனர். (யார் இந்த தஞ்சை #பாலசரஸ்வதி ?பாலசரஸ்வதியின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர் முழு விவரம் Googleல் தேடவும்)