Namma Thanjavur | Latest Tamil News, Cinema, Politics, India, World, Sports Live, Business News,   Daily Newspaper Online, Tamil Nadu, India

தஞ்சை மாவட்ட காவல்துறை அதிரடி 17 மாவட்டங்களில் 31 நபர்களிடம் பண மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் கைது

தஞ்சை மாவட்ட காவல்துறை அதிரடி 17 மாவட்டங்களில் 31 நபர்களிடம் பண மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் கைது
Top Banner

ஜூலை 04, தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவகல்லுாரி சாலை, B1/13, BSNL Quarters, என்ற முகவரியில் வசித்து வரும் திரு.A.சுரேஸ், (46) த/பெ அண்ணாதுரை என்பவரை TATA Capital என்ற நிறுவன Logo-வுடன் ஆன்லைன் மூலமாக கடன் தரும் பொருட்டு அவரது ஆதார் கார்டு, பேன் கார்டு, போட்டோ, வங்கி பரிவர்த்தனை விபரங்களை செல்போன் வாயிலாக கேட்டு, ரூ.2,50,000/- அவருக்கு லோன் Eligible என சொல்லி அவருககு் ஒரு கடன் Form ஒன்றை வாட்ஸ்அப்பில் அனுப்பி பின்பு அவரது வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.25,000/- இருக்கவேண்டும் அப்போது தான் லோன் கிடைக்கும் என கூறி Verification-க்காக அவரிடம் விபரங்கள் கேட்பதாகவும் அவர் கேட்கும் விபரங்கள் அனைத்தையும் சொல்லுங்கள் என கூறி ATM Card ன் 16 Digit எண், ATM Expiry Date மற்றும் கார்டின் CW எண் ஆகியவற்றை சொல்ல சொல்லி இரண்டு முறை OTP வர அதனையும் கேட்டு பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.24955/- பணமானது எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்ததுள்ளது. அதன்பிறகு அவர்கள் பணம் எடுத்த செய்தியை பார்த்தவுடன் அவர்களிடம் கோபமாக ஏன் பணம் எடுத்தீர்கள் என கேட்க அதற்கு போனை துண்டித்துவிட்டார்கள். அதன்பிறகு அவர் பலமுறை மேற்கண்ட எண்களை தொடர்புகொண்டபோது எந்தவித பதிலும் அவர்களிடமிருந்து இல்லை. மேற்கண்டவாறு திரு.A.சுரேஸ், (46) த/பெ அண்ணாதுரை என்பவர் சைபர் கிரைம் இணையதளம் வாயிலாக 25.06.2023 அன்று NCRP ACK No. 22906230034683 என புகாரினை பதிவு செய்தும் 01.07.2023 அன்று நிலையம் ஆஜராகி அளித்த புகாரினை பெற்றும் தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்: 24/2023 U/s 420,458,471 IPC r/w 55(C),55(D) IT Act – ன்படி வழக்கு பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய் குமார் இ.கா.ப. சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருமதி தேவராணி இ.கா.ப தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆஷிஸ் ராவத் இ.கா.ப., தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின்படி தனிப்படை அமைத்து எதிரிகளை தேடி வந்த நிலையில் எதிரிகளின் செல்போன் எண்களை வைத்து அவர்களை கண்காணித்தும் அவர்கள் அரக்கோணத்தில் தங்கியிருந்தது தெரியவந்ததன்பேரிலும் மேற்படி தனிப்படை அரக்கோணம் விரைந்து எதிரி-1: கார்த்திசன் 34/23, s/o செல்வம், 1, நடராஜ தெரு, மேலகோட்டைவாசல், நாகப்பட்டினம் மற்றும் எதிரி-2: சுரேக்ஷக்ஷி 34/23, s/o முத்துக்குமார், 55, 2nd Block, உதயசுரியன் நகர், வியாசர்பாடி ஆகிய இருவரையும் கைது செய்தும் அவர்களிடமிருந்து 42 செல்போன்கள் 37 செல்போன்கள் சார்ஜர்கள் பயன்படுத்தப்படாத 19 சிம்கார்டுகள் எதிரிகளால் பயன்பாட்டில் இருந்து வந்த 21 சிம்கார்டுகள், வேலையாட்கள் அலுலக வருகைப்பதிவேடு நோட்டு புத்தகங்கள்-3, பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்திய விபரங்கள் அடங்கிய நோட்டு புத்தகங்கள் -13 ஆகியவற்றை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட எதிரிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதே முறையில் நூற்றுகணக்கான நபர்களை ஏமாற்றி லட்ச கணக்கில் பண மோசடி செய்து வந்துள்ளது தெரிய வந்ததது. மேலும் மேற்கண்ட எதிரிகள் மீது இதுவரை தமிழகத்தில் கீழ்கண்ட மாவட்டங்களில்

இணையதளம் வாயிலாக பெறப்பட்டுள்ளதும்மொத்தம் 31 புகார்கள் குறிப்பிடதக்கது. மேலும் மேற்கண்ட எதிரிகள் ஏற்கனவே கொலை மற்றும் பண மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனவும் அவ்வழக்குகளில் மேற்கண்ட எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதும் தெரிய வருகிறது.

Top Banner

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *